முகப்பு /செய்தி /சென்னை / பட்டக்கத்தியுடன் சுற்றிய ரவுடிகள் - சென்னையில் வாகன சோதனையின்போது பரபரப்பு

பட்டக்கத்தியுடன் சுற்றிய ரவுடிகள் - சென்னையில் வாகன சோதனையின்போது பரபரப்பு

கைது செய்யப்பட்ட ரவுடிகள்

கைது செய்யப்பட்ட ரவுடிகள்

Chennai Rowdy Arrest | கைது செய்யப்பட்ட ரவுடிகள் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை பெரியமேட்டில் வாகன சோதனையில் பட்டக்கத்தி வைத்திருந்த 3  ரவுடிகளை  காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பெரியமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான கண்ணப்பர் திடல் அருகே நேற்றிரவு பெரியமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றபோது காவல்துறையினர் மூன்று பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது, வாகனத்தின் சீட்டுக்கு கீழே 6 பட்டாக் கத்திகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் மூவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மீஞ்சூர் பகுதியை  சார்ந்த ஆறுமுக ராஜா (23), டில்லி பாபு (19) மற்றும் சூளையை சேர்ந்த சத்திவேல் (19) என தெரியவந்தது.

மேலும், போலீசார் விசாரணையில், கடந்த 2016 ம் ஆண்டு முன்பு  மீஞ்சூர் பகுதியில் நடந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஆறுமுக ராஜா சிறைக்கு சென்று சமீபத்தில் பிணையில் வெளியே வந்ததாகவும், அதனால் எதிர்தரப்பில் உள்ளவர் தன்னை கொலை செய்ய முயற்சிக்கலாம் என்றும் தனது தற்காப்புக்காக இந்த பட்டாகத்திகளை வைத்துள்ளதாகவும் ஆறுமுக ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், வேறு ஒரு சம்பவத்தில் தொடர்புடைய பெரியமேடு பகுதியில் உள்ள ஒரு ரவுடியை கொலை செய்வதற்காக இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு பட்டாக் கத்திகளுடன் 3 பேரும் பெரியமேடு வரை பயணம் செய்து வந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Chennai, Chennai Police, Crime News