Home /News /chennai /

கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.. பாஜக துண்டு அணிந்துவந்த நபரை வெளியேற சொன்ன பொதுமக்கள்

கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.. பாஜக துண்டு அணிந்துவந்த நபரை வெளியேற சொன்ன பொதுமக்கள்

பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் போராட்டம்

இன்று ஜெசிபி இயந்திரத்துடன் கோவிலை இடிக்க அதிகாரிகள் வந்தனர்.  50 ஆண்டுகளுக்கும் மேலாக  வழிபாட்டில் இருக்கும் இக்கோயிலை இடிக்கக் கூடாது என நாட்டுப் படகுகளை சாலையில்  கிடத்தி , கோயில் முன்புறம்  அமர்ந்து 200 க்கும் மேற்பட்டோர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும் ...
சென்னை நொச்சிக் குப்பத்தில் பொது இடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கங்கா பவானி அம்மன் கோயிலை  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்ற ஜேசிபி எந்திரத்துடன் , நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்ட நிலையில் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நொச்சிக்குப்பத்தை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவர்கள்   கங்கா பவானி அம்மனை வழிப்பட்டு வருகின்றனர்.  நாட்டுப்படகு மீனவர்கள்  பவானி அம்மனை வழிபட்ட பிறகே கடலுக்கு செல்வதாக கூறப்படுகிறது.  2004ம் ஆண்டு சுனாமி தாக்கத்தின் போது கோயில் சேதம் அடைந்த நிலையில்  ,  பிறகு சில ஆண்டுகள் கரையில் வைத்து  வழிபடப்பட்டு  மீண்டும் பழைய இடத்தின் அருகிலேயே தற்போது கங்கா பவானி அம்மனுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இடத்தில் புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் அனுமதி இன்றி கோயில் கட்டப்பட்டுள்ளதாக நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த அஞ்சலை என்பவர் அளித்த புகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  கோயிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இன்று ஜெசிபி இயந்திரத்துடன் கோவிலை இடிக்க அதிகாரிகள் வந்தனர்.  50 ஆண்டுகளுக்கும் மேலாக  வழிபாட்டில் இருக்கும் இக்கோயிலை இடிக்கக் கூடாது என நாட்டுப் படகுகளை சாலையில்  கிடத்தி , கோயில் முன்புறம்  அமர்ந்து 200 க்கும் மேற்பட்டோர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

நீதிமன்றத்தில் கொரோனா காலகட்டத்தில் இணைய வழியில் வழக்கு நடந்ததால் வழக்கு விவரம் குறித்து தங்களால் அறிந்து கொள்ள முடியவில்லை எனவும் மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்து தங்களது தரப்பு வாதத்தை சமர்ப்பிக்க  குறிப்பிட்ட காலக்கெடு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்த மீனவ மக்களிடம் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் , சென்னை  மாநகராட்சி அதிகாரிகள் , காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவில் போராட்டம் நடைபெற்ற போது காவி துண்டு அணிந்து வந்த பாஜக உறுப்பினர் ஒருவரை போராட்டம் நடைபெற்ற கூட்டத்தில் அனுமதிக்காமல் பொதுமக்கள்  வெளியே போக கூறினர். இதையடுத்து  போலீசார் பாஜக நபரை வெளியேற்றினர்.
அதேபோல் போராட்டம் நடைபெற்ற போது கூட்டத்தின் நடுவே பெண் ஒருவருக்கு சாமி வந்து ஆட துவங்கினார். பின்னர் கோவில் நுழைவாயில் அருகே சென்ற அந்த பெண்மணி கோவிலுக்கு ஒன்றும் ஆகாது என கூறியதால்  பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
Published by:Murugesh M
First published:

Tags: Chennai, Temple

அடுத்த செய்தி