ஹோம் /நியூஸ் /சென்னை /

மழை நீர் வடிகால் கால்வாயில் விழுந்து செய்தியாளர் பலி.. சென்னையில் சோகம்!

மழை நீர் வடிகால் கால்வாயில் விழுந்து செய்தியாளர் பலி.. சென்னையில் சோகம்!

செய்தியாளர் முத்துகிருஷ்ணன்

செய்தியாளர் முத்துகிருஷ்ணன்

பாதிக்கப்பட்ட நபருக்கு வெளி காயங்கள் பெரிதாக ஏற்படவில்லை இருப்பினும் உள்புறம் ரத்தம் உறைந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், காசி திரையரங்கம் அருகே தோண்டப்பட்டிருந்த மழை நீர் வடிகால் கால்வாயில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை தரமணி அடுத்த கந்தன் சாவடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (24). இவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார்.

  இந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து நான்கு மாதங்களே ஆன நிலையில் நேற்று இரவு பணி முடித்துவிட்டு ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து நடந்து வந்துள்ளார்.

  அப்போது காசி திரையரங்கம் அருகே மழை நீர் வடிகால் பணி நடைபெறும் பகுதியை இவர் தாண்ட முற்பட்டபோது காலில் கம்பி பட்டு இடறி, மழை நீர் வடிகால் கால்வாயில் விழுந்துள்ளார்.

  பள்ளத்தில் விழுந்ததில் ஆங்காங்கே கம்பி குத்தி உட்காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அப்போது இவருடன் வந்த சக ஊழியர்கள் இவரை மீட்டு தரமணியில் உள்ள டைட்டில் பார்க் VH மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று விடியற்காலை மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  இதையும் வாசிக்க: விபத்தில் மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியர் : உறுப்பு தானம் மூலம் 7 ​​உயிர்களை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!

  பாதிக்கப்பட்ட நபருக்கு வெளி காயங்கள் பெரிதாக ஏற்படவில்லை இருப்பினும் உள்புறம் ரத்தம் உறைந்துள்ளது. பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  செய்தியாளார் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Accident, Journalist