ஹோம் /நியூஸ் /சென்னை /

மழையால் சாலையில் தேங்கும் நீர்... வடிகால் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் pஅரிதாபமாக விழுந்த பெண்... சிசிடிவி காட்சிகள்

மழையால் சாலையில் தேங்கும் நீர்... வடிகால் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் pஅரிதாபமாக விழுந்த பெண்... சிசிடிவி காட்சிகள்

சாலையில் விழும் பெண்

சாலையில் விழும் பெண்

Chennai | பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  முடிச்சூரில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால். சென்னையில் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கிவருகிறது.

  மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட  12-வது வார்டு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் குளம்  போல் தேங்கி உள்ளது.

  மழை நீர் வடிக்கால்வாய் அமைப்பதற்காக பகுதி முழுவதும் பள்ளங்கள் தோண்டப்பட்டு, பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

  ALSO READ | தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்

  இந்த பள்ளங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் மழைநீருக்குள் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பள்ளத்திற்குள் விழுந்து எழுந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாலை முழுவதும் மழைநீரால் மூழ்கியதால்,  விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சியின் அலட்சியப்போக்கால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  செய்தியாளர்: சுரேஷ்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Heavy rain, Heavy Rainfall, Mudichur, Rain, Tambaram