ஹோம் /நியூஸ் /சென்னை /

கல்லூரி மாணவியை ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர்.. பரங்கிமலை ரயில் நிலைத்தில் பரபரப்பு!

கல்லூரி மாணவியை ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர்.. பரங்கிமலை ரயில் நிலைத்தில் பரபரப்பு!

பரங்கிமலை ரயில் நிலையம்

பரங்கிமலை ரயில் நிலையம்

கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சதீஷை பிடிக்க காவல்துறையினர் 2 தனிப்படைகள்  அமைத்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்தியா(20) என்பவரை காதலித்துள்ளார்.இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இவர்கள் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

  அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஆகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயிலின் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார்.

  இதையும் வாசிக்க: மது போதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கிய இயக்குநர்.. கார் பறிமுதல்!

  ரயிலில் சிக்கி சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சதீஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

  இது குறித்து தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனைதொடர்ந்து தப்பி ஓடிய சதீஷை பிடிக்க காவல்துறையினர் 2 தனிப்படைகள்  அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Crime News, Girl Murder, Railway Station