முகப்பு /செய்தி /சென்னை / சென்னை மெட்ரோ ரயில் மீண்டும் இயக்கம்... பயணிகள் மகிழ்ச்சி

சென்னை மெட்ரோ ரயில் மீண்டும் இயக்கம்... பயணிகள் மகிழ்ச்சி

மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில்

Chennai Metro | தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகளை 6 பேர் கொண்ட குழு தொடர்ந்து மேற்கொண்டு சரி செய்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் ஆலந்தூர் ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன.

சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை பயணிக்கும் பயணிகள் ஆலந்தூரில் இறங்கி விம்கோ நகரில் இருந்து தேனாம்பேட்டை வழியாக விமான நிலையம் வரையில் இயக்கப்படும் ரயில் மாற்றி பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதனால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகளை 6 பேர் கொண்ட குழு தொடர்ந்து மேற்கொண்டது. இரவும் நீடித்த இந்த பணியானது 20 மணி நேரத்திற்கு பிறகு அதிகாலை 4 மணியளவில் சரிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று காலை முதல் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Chennai, Chennai metro, Metro Rail