ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில்

மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் 13.01.2023 (வெள்ளிக்கிழமை) 14.01.2023 (சனிக்கிழமை) மற்றும் 18.01.2023 (புதன்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ இரயில் சேவைகளுக்கான நேரம் நீட்டிக்கப்படுமென சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மட்டும் நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து முனையங்களிலிருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 11 மணிக்கு பதிலாக 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 18-ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களிலிருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ இரயில் சேவை காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும். எனவே, 2023 ஜனவரி 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மேற்கண்ட மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் 13.01.2023 (வெள்ளிக்கிழமை) 14.01.2023 (சனிக்கிழமை) மற்றும் 18.01.2023 (புதன்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மட்டுமே” என குறிப்பிட்டுள்ளது.

First published:

Tags: Chennai metro, Metro Train, Pongal festival