Home /News /chennai /

சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வந்தது உத்தரவு!!..

சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வந்தது உத்தரவு!!..

மழை நீர் வடிகால் அமைக்கும் பணி

மழை நீர் வடிகால் அமைக்கும் பணி

Chennai: முதல் கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பில் 400 சாலைகளில் பணிகளை மேற்கொள்ள தேர்வு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த இடங்களில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை அக்டோபர் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் 65 முதல் 70 சதவீதம் வரை மட்டுமே நிறைவடைந்துள்ளது.  மீதமுள்ள பணிகளை வேகமாக முடிக்கவும் உத்தரவிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

மேலும் மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை, குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் சாலைகளில் பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சென்னை மாநகர சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக இருக்கும் நிலையில், பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் என மொத்தம் 2,000 சாலைகளில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பில் 400 சாலைகள் பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Also Read: அதிகரிக்கும் காய்ச்சல்.. தமிழகத்தில் நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

பொதுமக்களின் பயன்பாடு மற்றும் தேவையை அடிப்படையாக கொண்டு சாலைகளை தேர்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது, மீதமுள்ள 1600 சாலை பணிகள் அடுத்தடுத்து மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.30 கோடி மதிப்பில் பேருந்து வழித்தட சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. எண்ணூர் நெடுஞ்சாலை, டிடிகே சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.  அதேபோல், மெரினா இணைப்பு சாலை ரூபாய் 2.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக மாற்றப்பட உள்ளது. இதில், மழைநீர் வடிகால்களை சுற்றி எந்த அளவு சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சாலைகளில் புதிய பணிகளுக்காக குழி தோண்டக்கூடாது எனவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
Published by:Arunkumar A
First published:

Tags: Chennai, Chennai corporation, KN Nerhu, Mayor Priya

அடுத்த செய்தி