ஹோம் /நியூஸ் /சென்னை /

பொதுமக்களுக்கு வழங்க 2 லட்சம் கொசு வலைகள் தயார் - சென்னை மேயர் பிரியா பேட்டி

பொதுமக்களுக்கு வழங்க 2 லட்சம் கொசு வலைகள் தயார் - சென்னை மேயர் பிரியா பேட்டி

சென்னை மேயர் பிரியா

சென்னை மேயர் பிரியா

சாலையோரம் நீர்நிலைகளின் அருகில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போரை கண்டறிந்து கொசு வலை வழங்கப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், கொசுகடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், இரண்டு லட்சம் கொசு வலைகள் வழங்க தயார் நிலையில் இருப்பதாக சென்னையின் மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.

  நேற்று சென்னையில், உள்ள திரு.வி.க நகர் மண்டலத்தில் அமைச்சர் சேகர் பாபுவும், சென்னை மேயர் பிரியா ராஜனும் ஆய்வு செய்தனர். அங்கு நடைபெறும் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும், தூய்மை பணிகளையும் ஆய்வு செய்தனர்.

  இதையும் படிங்க ''மழையை சமாளிக்க ரெடி.. நாளைக்கு சீர்காழி போறேன்'' - ஆய்வின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின்

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, பொதுமக்களை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்கும் வகையில், அவர்களிளுக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டு வருகிரது. திரு.வி.க மண்டலத்திலும் கொசு வலைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சாலையோரம் நீர்நிலைகளின் அருகில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போரை கண்டறிந்து கொசு வலை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக இரண்டரை லட்சம் கொசு வலைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Chennai, Mosquito, Priya Rajan