முகப்பு /செய்தி /சென்னை / திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணிடம் ரூ.68 லட்சம் வரை மோசடி செய்த இளைஞர்... பிரபல தொழிலதிபரின் மகளுடன் நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்!

திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணிடம் ரூ.68 லட்சம் வரை மோசடி செய்த இளைஞர்... பிரபல தொழிலதிபரின் மகளுடன் நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Chennai Marriage stopped | காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுவிட்டு பிரபல தொழிலதிபரின் மகளுடன் நடைபெற இருந்த இளைஞரின் திருமணத்தை போலீசார் நிறுத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை அருகே தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காதலனின் திருமணத்தை போலீசார் நிறுத்தினர்.

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரூபாய் 68 லட்சம் மோசடி செய்துவிட்டு இன்று காலை வேறு ஒரு பெண்ணுடன் நடக்கவுள்ள காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்யக்கோரி சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார்.

இன்று காலை பிரபல தொழிலதிபரின் மகளுடன் ஈ.சி.ஆரில் நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தகோரி இளம்பெண் கொடுத்த புகார் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னையை சேர்ந்த நிஷாந்த் (27) என்ற இளைஞர். கடந்த 13 ஆண்டுகளாக தன்னுடன் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், இந்நிலையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பெண் வீட்டாரிடம் பேசி அவ்வப்போது என மொத்தம் ரூ.68 லட்சம் வரை பணம் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், தன்னை ஏமாற்றியவரின் திருமணத்தை நிறுத்தி, கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து,  விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரைந்தனர்.  தனியார் ரிசார்ட்டிற்கு நேற்றிரவே சென்ற போலீசார் இன்று நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ப.வினோத் கண்ணன், இசிஆர்.

First published:

Tags: Chennai, Marriage