ஹோம் /நியூஸ் /சென்னை /

மாண்டஸ் புயல் : கரையைக் கடந்தும் தொடரும் கடல் சீற்றம்... மெரினா செல்ல அனுமதியில்லை!

மாண்டஸ் புயல் : கரையைக் கடந்தும் தொடரும் கடல் சீற்றம்... மெரினா செல்ல அனுமதியில்லை!

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடற்கரை முழுவதும் உள்ள நீர் கருமை நிறத்தில் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மாண்டஸ் புயல் கரையைக் கடந்த பிறகும், மெரீனா கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, பின்னர் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்தது. நேற்று இரவு 11 மணி வாக்கில் புயல் கரையை கடக்கும் போது கனமழையுடன் சூரைகாற்றும் வீசியது. சென்னையை புரட்டிப்போட்ட இந்த புயல் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மாண்டஸ் புயல் முழுமையாக கிழக்கு கடற்பகுதியை கடந்துவிட்ட நிலையிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடற்கரை முழுவதும் உள்ள நீர் கருமை நிறத்தில் உள்ளது.

இதனால் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வரும் பொதுமக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

First published:

Tags: Chennai rains, Cyclone Mandous, Marina Beach