ஹோம் /நியூஸ் /சென்னை /

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதையை சிதைத்த மாண்டஸ் புயல்... விரைவில் சரி செய்வோம்.. மேயர் உறுதி..!

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதையை சிதைத்த மாண்டஸ் புயல்... விரைவில் சரி செய்வோம்.. மேயர் உறுதி..!

மெரினா

மெரினா

நேற்று இரவு முதல் பெய்து வந்த மழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை சேதமடைந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மெரினாவில் மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதமடைந்தது.

மாணடஸ் புயல் சென்னையில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் 13 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. அது இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பெய்து வந்த மழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பாதை சேதமடைந்தது.

இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனிடம் கேட்டபோது, மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை கடல் சீற்றத்தால் சேதமடைந்துள்ளது எனவும் சிறப்பு பாதை விரைவில் சரிசெய்யபடும் எனவும் உறுதியளித்தார்.

First published:

Tags: Chennai, Marina Beach