ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாடத் தடை..

சென்னை கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாடத் தடை..

மாதிரி படம்

மாதிரி படம்

கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 31.12.2022 அன்று இரவு 08.00 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் 31.12.2022 அன்று இரவு 08.00 மணிக்கு மேல் கடற்கரை மணற் பகுதிக்கு வரவேண்டாம் எனவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: New Year 2023, New Year Celebration