முகப்பு /செய்தி /சென்னை / மகனின் ஜாமீனுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.. சென்னையில் பரபரப்பு

மகனின் ஜாமீனுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.. சென்னையில் பரபரப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

முகமது இலியாஸ் அடுத்தக்கட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, ​​தனது மகனின் ஜாமீன் மனுவிற்கு பணம் வழங்குவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை: இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறித்துச் சென்ற 58 வயது நபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு ஜாமீன் வாங்க பணம் தேவைப்பட்டதால் இந்தக் குற்றத்தை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

திருமங்கலத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி (61) என்ற பெண் அப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக்கில் வந்த மர்மநபர் அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். புகாரைப் பெற்ற உடனேயே, திருமங்கலம் போலீசார் அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கண்டுபிடித்ததாக சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் போலீஸார் திடீரென நுழைந்து 58 வயது நபர் ஒருவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த நபர், புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது இலியாஸ் என்பது தெரியவந்தது.

மேலும், முகமது இலியாஸ் அடுத்தக்கட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, ​​தனது மகனின் ஜாமீன் மனுவிற்கு பணம் வழங்குவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட குமார் என்ற நபரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், தனது மகன் முகமது ஃபியாஸ் (25) கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் சிறையில் அடைக்கப்பட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

தனது மகனின் ஜாமீன் விண்ணப்பத்திற்காக பணம் திரட்ட வேண்டியிருந்ததால் திருடியதாக இலியாஸ் போலீசாரிடம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்குமூலத்தின் அடிப்படையில் முகமது இலியாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

First published:

Tags: Chennai, Crime News