சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 5,400 டன் குப்பை சேர்கிறது. ஒரு நபர் தினமும் சராரியாக 400-500 கிராம் குப்பையை உருவாக்குகிறார். பிரிக்கப்படாமல் சேரும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. திடக்கழிவை கையாள்வதில் மிகுந்த சிரமங்களை அரசாங்கம் சந்தித்து வருகிறது. இந்நிலையில் சென்னை, ஆழ்வார்பேட்டையை சேர்ந்த உளவியல் நல ஆலோசகர் சங்கர் தனது வீட்டில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், 8 விதமாக பிரித்து வைக்கிறார். அதாவது மின் கழிவுகள், மருத்துவ கழிவுகள், பால் கவர், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள், அட்டைகள், காய்கறி கழிவுகள், ககிதங்கள் என குப்பைகளை பிரிக்கிறார்.
இதில், மக்கும் குப்பைகளை எளிமையான முறையில் உரமாக தயாரிக்கிறார். அதை பயன்படுத்தி வீட்டு மொட்டை மாடியில் 150க்கும் மேற்பட்ட செடிகளை வளர்க்கிறார். 5 பேர் வசிக்கும் அவரது வீட்டில் இருந்து மக்கும் குப்பைகள் எதுவும் வெளியில் குப்பை தொட்டிக்கு வருவதில்லை.
பிரித்து வைக்கும் மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு கொடுத்து விடுகிறார். சென்னையில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குப்பைகள் எவ்வாறு பிரித்து கொடுக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். குப்பைகளை பிரித்து கொடுப்பது பெரிய காரியம் இல்லை எனவும், இதை அனைவரும் பின்பற்றினால் சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கும் என்கிறார் சங்கர். கடந்த ஏழு ஆண்டுகளாக இவர் குப்பைகளை பிரித்து கொடுத்து வருகிறார். அவரை பார்த்து, அந்த தெருவில் உள்ள மற்றவர்களும் குப்பைகளை பிரித்து கொடுக்கும் பழக்கத்தை பின்பற்றுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.