Home /News /chennai /

மனைவி நடத்தும் டியூசனில் படிக்க வந்த மாணவியுடன் கள்ளக்காதல்.. கம்பி எண்ணும் கணவன்

மனைவி நடத்தும் டியூசனில் படிக்க வந்த மாணவியுடன் கள்ளக்காதல்.. கம்பி எண்ணும் கணவன்

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது

Crime : சென்னை திருவொற்றியூரில் மனைவி மற்றும் பெற்ற குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.

    கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை தட்டி கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது

    சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மேரி வனஜா. இவருக்கு சேகர் என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மேரி அப்பகுதியில் டுட்டோரியல் செண்டர் நடத்தி வருகிறார். மேரியின் டுட்டோரியல் சென்டரின் படித்த ஒரு பெண்ணுடன் அவரது கணவர் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மேரி அதிர்ச்சியடைத்துள்ளார்.

    இதுகுறித்து தனது கணவனை தட்டிக்கேட்டுள்ளார். மனைவியின் கேள்விகளால் ஆத்திரமடைந்த சேகர் இதுகுறித்து பேசினால் உன்னையும் குழந்தைகளையும் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் தனது டிட்டோரியல் சென்டரில் ஏற்கனவே மாணவியாக படித்து முடித்தவர்.அப்பொழுது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக தற்பொழுது கள்ளத்தொடர்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதே போன்று தற்பொழுது படிக்கும் மாணவிகள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் நேரிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்த தனது கணவர் மீது மேரி புகார் அளித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து மனைவி மற்றும் பெற்ற குழந்தைகளை கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கணவன் சேகர் என்பவரை திருவொற்றியூர் மகளிர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: அசோக் குமார்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Crime News, Illegal relationship

    அடுத்த செய்தி