முகப்பு /செய்தி /சென்னை / ”நீ எங்க போனாலும் வருவேன்”- பைக்கில் செல்லும் உரிமையாளருடன் ஹாயாக ரைடு சென்ற நாய்..! வைரலாகும் வீடியோ

”நீ எங்க போனாலும் வருவேன்”- பைக்கில் செல்லும் உரிமையாளருடன் ஹாயாக ரைடு சென்ற நாய்..! வைரலாகும் வீடியோ

வைரலாகும் நாய் வீடியோ

வைரலாகும் நாய் வீடியோ

Chennai dog | நாய்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட அந்த பிரத்யேக பையில் அமர்ந்திருந்த நாய்க்குட்டி குஷியாக வெளியே பார்த்தபடி பைக்கில் சென்றது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras] | Maduravoyal

சென்னையில் புத்தகங்களை சுமந்து செல்வது போல் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டியை முதுகில் சுமந்து சென்ற வாகன ஓட்டியின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்லமாக வளர்க்கும் பிராணிகளை சிலர் பலவிதமாக பாசம் காட்டி வளர்ப்பது உண்டு. இந்த நிலையில் சென்னை , மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவாகன ஓட்டி ஒருவர் தனது முதுகில் மாட்டப்பட்ட பையில் தான் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டியை வைத்து கொண்டு முதுகில் சுமந்து கொண்டு பைக்கில் சென்றார்.

மேலும் முதுகில் மாட்டி இருந்த பிரத்யேக பையில் அந்த நாய்க்குட்டியானது சாலையை எட்டி பார்த்தபடி பையில் லாவகமாக அமர்ந்து இருந்தது. பையில் இருந்து வெளியே குதித்து செல்ல முற்பட்டாலும் ஒரு கட்டத்திற்கு மேல் வெளியே செல்ல முடியவில்லை. அதற்கு ஏற்றவாறு அந்த பை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

செய்தியாளர்: சோமசுந்தரம், சென்னை.

First published:

Tags: Chennai, Dog, Local News, Viral Video