Home /News /chennai /

சிசிடிவி கேமராவுக்கு முத்தம் கொடுத்து சென்ற திருடர்கள்.. அதிர்ந்த பொதுமக்கள்- சவால் விட்டவர்களை தேடும் சென்னை போலீஸ்

சிசிடிவி கேமராவுக்கு முத்தம் கொடுத்து சென்ற திருடர்கள்.. அதிர்ந்த பொதுமக்கள்- சவால் விட்டவர்களை தேடும் சென்னை போலீஸ்

சிசிடிவி கேமரா காட்சி

சிசிடிவி கேமரா காட்சி

கொள்ளையர்கள் போலீசாருக்கு சவால் விடும் வகையில் சிசிடிவி கேமரா அருகில் வந்து முகத்தை காட்டிவிட்டு முத்தம் கொடுத்து விட்டு செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madippakkam (Madipakkam), India
    சென்னை அருகே மர்மநபர்கள் சிசிடிவி கேமராவிற்கு முத்தம் கொடுக்கும் சிசிடிவி காட்சி சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.  

    சென்னை மடிப்பாக்கம் மற்றும் உள்ளகரம் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனம், சைக்கிள் ஆகியவை திருடு போவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட சுற்றித்திரிந்தபோது அங்கு பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவிற்கு முத்தம் கொடுத்து சென்றுள்ளனர்.

    அவசரமாக ஓடும் அந்த இளைஞர்கள் தங்களை சிசிடிவி கேமரா படம் பிடித்துவிட்டது என்று தெரிந்துக்கொண்டு துனிச்சலாக போலீசாருக்கு சவால் விடும் வகையில் சிசிடிவி கேமரா அருகில் வந்து முகத்தை காட்டிவிட்டு முத்தம் கொடுத்து விட்டு செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த சிசிடிவி காட்சியோடு உள்ளகரம் பகுதி மக்கள் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.  சிசிடிவி காட்சியில் பதிவானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.பல்வேறு குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மூன்றாம் கண் என அழைக்கப்படும் சிசிடிவி காட்சியால் போலீசார் சிக்கி சிறையில் கம்பி என்னுவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் அவசரம் அவசரமாக ஓடும்போது தங்களை படம் பிடித்து சிசிடிவி கேமராவிற்கு தைரியமாக முத்தம் கொடுத்து சென்றுள்ளது போலீசார்க்கு துனிச்சலோடு சவால் விட்டது தெரிகிறது.

    செய்தியாளர்: வினோத் கண்ணன்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CCTV, CCTV Footage, Chennai, Crime News, Tamil News

    அடுத்த செய்தி