சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் போர் நினைவுச் சின்னம் அருகே நேற்றிரவு 1.30 மணிக்கு காவலர்களுடன் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இளம்பெண் ஒருவருடன் வந்த நபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் வாகன உரிமம் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து காவல்துறையினர் கேட்டபோது தான் யார் தெரியுமா? நான் நீதிமன்ற வழக்கறிஞர், நீதிபதி எனக்கு நன்றாக தெரியும் எனது வாகனத்தையே நிறுத்துவாயா? எனக் கூறிய அந்த நபர் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரனை முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் முகத்தில் ரத்த காயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர் பெயர் பிரசன்ன வெங்கடேசன் (27), என்பதும் வியாசர்பாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் எனவும் தெரியவந்தது. பிரசன்ன வெங்கடேசன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க; காய்ச்சிய கம்பியை பிடித்து கற்பை நிரூபி... இளைஞருக்கு ஊர் மக்கள் கொடுத்த விநோத தீர்ப்பு..!
தொடர்ந்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பிரசன்ன வெங்கடேசன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை நீதிபதி பிணையில் விடுவித்தார். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேசனுக்கு ஆதரவாக 15க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai Police, Crime News