ஹோம் /நியூஸ் /சென்னை /

அழகை வர்ணித்து தினமும் வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ்.. பெண் டாக்டருக்கு செக்ஸ் தொல்லை!

அழகை வர்ணித்து தினமும் வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ்.. பெண் டாக்டருக்கு செக்ஸ் தொல்லை!

பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது

பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது

Chennai abuse | மருத்துவரின் கிளினிக் சென்ற போது அவர் அழகில் மயங்கினேன், நேரில் பேச தயங்கியதால் வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதாக வாக்குமூலம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையில் பெண் மருத்துவருக்கு வாட்ஸ் ஆப் மூலம் பாலியல் தொல்லை அளித்து வந்த மருந்து விற்பனை பிரதிநிதியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனரை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், தனக்கு திருமணமாகி 13 வயதில் ஒரு மகன் இருப்பதாக தெரிவித்தார். சொந்தமாக கிளினிக் நடத்தி வரும் தனக்கு வாட்ஸ் அப் வாயிலாக மர்மநபர் ஒருவர் தவறான நோக்கத்துடன் அழகை வர்ணித்து தினசரி மெசேஜ் அனுப்பி வருவதாக தெரிவித்தார்.

அவரை கண்டித்து வாட்ஸ் அப் இணைப்பை துண்டித்த பிறகு அவர் விடாமல், செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வருவதாக தெரிவித்தார். பலமுறை கண்டித்தும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக கூறிய அவர், மர்ம நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபரை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், சென்னை பம்மலை சேர்ந்த பன்னீர்செல்வம் தான் ஆபாச மெசேஜ் அனுப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருந்து விற்பனை பிரதிநிதியான இவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில், பெண் மருத்துவரின் அழகில் மயங்கினேன், மாத்திரை சப்ளை செய்வதற்காக அவரது கிளினிக் சென்றுள்ளேன். அவரிடம் நேரில் பேச அச்சமாக இருந்ததால் செல்போனில் தகவல் அனுப்பினேன் என வாக்குமூலம் அளித்தார். இதனை பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Chennai, Crime News, Sexual abuse