ஹோம் /நியூஸ் /சென்னை /

வீட்டின் இரும்பு கேட்டில் பாய்ந்த மின்சாரம்.. தொட்டதும் ஷாக்கடித்து உயிரிழந்த தம்பதி!

வீட்டின் இரும்பு கேட்டில் பாய்ந்த மின்சாரம்.. தொட்டதும் ஷாக்கடித்து உயிரிழந்த தம்பதி!

உயிரிழந்த தம்பதி

உயிரிழந்த தம்பதி

Chennai: தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், தங்கள் ஓய்வூதியம் மற்றும் வாடகை வருமானத்தை ஏழை குழந்தைகள் கல்விக்கு செலவிட்டனர்.

 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  வீட்டின் இரும்பு கேட்டை தொட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர்.

  சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி மூர்த்தி (78) மற்றும் அவரது மனைவி பானுமதி (76) ஆகியோர் வசித்து வந்தனர்.

  இவர்கள் நேற்று இரவு வழக்கம்போல் மூர்த்தி, இரும்பு கேட்டை மூட முயன்ற போது மின்சாரம் தாக்கியது. அப்போது அவர் அலறியது கண்ட அவரது மனைவி பானுமதி அவரை காப்பாற்ற முயற்சி செய்தார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் அங்கேயே சுருண்டு விழுந்தனர்.

  சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வந்த காவல்துறையினர், நடத்திய விசாரணையில் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இரும்பு கேட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கில் இருந்து மழை நீர் மூலம் மின்சாரம் கசிந்தது பின்னர் தெரிவந்தது.

  இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், தங்கள் ஓய்வூதியம் மற்றும் வாடகை வருமானத்தை ஏழை குழந்தைகள் கல்விக்கு செலவிட்டனர். அவர்களால் படிக்க வைக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவராகி தற்போது கனடாவில் பணிபுரிகிறார். மேலும், பலர் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். இவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published: