ஹோம் /நியூஸ் /சென்னை /

திடீரென சாய்ந்த சிக்னல் கம்பம்.. சாலையில் சென்ற கார் மீது விழுந்ததால் பரபரப்பு

திடீரென சாய்ந்த சிக்னல் கம்பம்.. சாலையில் சென்ற கார் மீது விழுந்ததால் பரபரப்பு

கார் மீது விழுந்த சிக்னல்

கார் மீது விழுந்த சிக்னல்

சிக்னல் திடீரென சாலையின் நடுவே கிழே விழுந்த விபத்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னையை அருகே விளம்பர பேனருடன் இருந்த சிக்னல் திடீரென சாலையில் சென்றுக்கொண்டிருந்த காரில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

  சென்னை, கேளம்பாக்கம் கோவளம் செல்லும் சந்திப்பில் சின்கலுடன் தனியார் விளம்பர பேனர் பொறுத்தப்பட்டிருந்தது. அது நேற்று திடீரென சாலையில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

  இந்த சாலையில் வாகனங்கள் எப்போதும் அதிகமாக சென்று வரும் நிலையில் துரு பிடித்து இருந்த சிக்னல் பலம் இழந்து திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்தது.

  கார் மீது விழுந்ததில் கார் கண்ணாடி உடைந்து கார் சேதமடைந்தது. நல்வாய்ப்பாய் காரில் சென்றவர் உயிர் தப்பினார். மேலும் காரின் பின்னால் வந்த வாகனங்கள் விளம்பர பேனருடன் இருந்த சிக்னல் கீழே விழுவதை பார்த்ததும் சூதாரித்துக்கொண்டதால் உயிர்தப்பினர்.

  தொடரும் அதிர்ச்சி - 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியை விட்டு நீக்கிய சோமேட்டா!

  தகவல் அறிந்த கேளம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்து கிடந்த சிக்னலை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

  சாலையில் தனியார் விளம்பர பேனருடன் நின்றிருந்த சிக்னல் திடீரென சாலையின் நடுவே கிழே விழுந்து விபத்துக்குள்ளானதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு நிலவியது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Accident, Chennai