ஹோம் /நியூஸ் /சென்னை /

கார், பைக்கை தீபாவளி பரிசாக வழங்கிய நகைக்கடை உரிமையாளர்... சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்

கார், பைக்கை தீபாவளி பரிசாக வழங்கிய நகைக்கடை உரிமையாளர்... சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்

ஊழியர்களுக்கு கார், பைக் வழங்கி அசத்திய கடை உரிமையாளார்

ஊழியர்களுக்கு கார், பைக் வழங்கி அசத்திய கடை உரிமையாளார்

தீபாவளி போனஸ் கொடுப்பதற்கே யோசிக்கும் உரிமையாளர்களுக்கு நடுவே ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கார் பைக்குகளை வழங்கி அசத்தியுள்ளார் ஜெயந்திலால் சலானி.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னையில் உள்ள  சலானி (CHALLANI)  நகைக்கடை  உரிமையாளர், தனது ஊழியர்களுக்குத் தீபாவளி பரிசாக கார் மற்றும் பைக்குகளை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தீபாவளி போனஸ் கொடுப்பதற்கே யோசிக்கும் உரிமையாளர்களுக்கு நடுவே ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கார் பைக்குகளை வழங்கி அசத்தியுள்ளார் ஜெயந்திலால் சலானி.

  சென்னையில் சலானி (CHALLANI) என்ற பெயரில் நகைக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதன் உரிமையாளரான ஜெயந்தி லால், தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசை வித்தியாசமான முறையில் வழங்க முடிவெடுத்தார். அந்த வகையில் தனது ஊழியர்களில் 10 பேருக்கு கார்களையும் 20 பேருக்கு பைக்குகளையும் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுவும் குடும்பத்தினருடன் ஊழியர்களை வரவழைத்து கார் மற்றும் டூவிலர் சாவிகளை வழங்கி அவர்களை தீபாவளி பரிசு மழையில் நனைத்திருக்கிறார் சலானி.

  Read More : இப்படி ஒரு திருமண கொண்டாட்டமா..! நெருப்புக்கு மத்தியில் ஆட்டம் போட்ட புதுமண தம்பதி - வைரலாகும் வீடியோ

  தனது ஏற்ற இறக்கங்களில் தன்னோடு பயணித்த ஊழியர்களை, தனது குடும்பமாகவே நினைப்பதாகக் கூறியுள்ள ஜெயந்தி லால், அதனால்தான் கார் மற்றும் பைக்குகளை அவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

  போனஸ் கேட்டு நிறுவனங்களில் ஊழியர்கள் போராட்டம் நடத்தும் இந்தக் காலத்தில் ஊழியர்களுக்கு கார், பைக் பரிசாக வழங்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chennai, Deepavali, Diwali, Tamil Nadu