Home /News /chennai /

அம்பத்தூரில் 54 ஆண்டுகள் கழித்து சந்தித்துகொண்ட அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்..

அம்பத்தூரில் 54 ஆண்டுகள் கழித்து சந்தித்துகொண்ட அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்..

54 வருடம் கழித்து ரீயூனியன்! நெகிழ்ச்சியான தருணம்

54 வருடம் கழித்து ரீயூனியன்! நெகிழ்ச்சியான தருணம்

தங்கள் பள்ளியில் பயிலும் ஏழை எளிய பயணம் மாணவ மாணவியர்களுக்கு உதவி செய்ய அறக்கட்டளை அமைத்து நிதி திரட்டி உதவியும் செய்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    1968 முதல் 2000 ஆண்டுவரை சென்னை ICF ல் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 1000 பேர் ஒன்று சேர்ந்து தங்கள் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்ததோடு வகுப்பறையில் அமர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    சென்னை வில்லிவாக்கம் ICF ல் உள்ள ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் 1968 முதல் 2000 வரை கல்வி பயின்றவர்கள் தற்பொழுது காவல் துறை, இந்திய இணைப்புபெட்டி தொழிற்சாலை, சுங்கவரித்துறை, அறிவியல் விஞ்ஞானிகள் ,தொழில் அதிபர்கள், வங்கிபணி, மருத்துவர்கள், இன்ஜினியர்கள் என பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக ஒன்றிணைக்கப்பட்டு இவர்கள் தங்கள் குடும்பத்தோடு மீண்டும் ஒன்று சேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் பள்ளிக்கால அனுபவம், குடும்ப நிகழ்வுகளையும் தங்கள் பணியாற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

    இவர்களை ஒருங்கிணைத்த எஜாஸ், வைத்தியநாதன், திருநாவுக்கரசு, சுபாஷ் மற்றும் பத்மா உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். பலர் இந்த நிகழ்வுக்காக வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பி, நிகழ்ச்சி முடிந்த பின்னர் அன்றைய தினமே வெளிநாடு திரும்பினர். இவர்கள் தற்பொழுது பள்ளியில் பயின்று வரும் ஏழை எளிய மாணவர்களுக்கு கடந்த 6 வருடமாக கல்வி நிதி,விளையாட்டு உபகரணம், ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

    Read More; காலின் உள்ளே சிக்கிய கற்களை அகற்றாமல் தையல் போட்ட அரசு மருத்துவமனை ஊழியர்.. நோயாளி வேதனை

    பள்ளியில் படித்தோம். மீண்டும் நீண்ட வருடம் கழித்து ஒன்று கூடினோம், உணவு அருந்தினோம், குழு புகைப்படத்தை எடுத்தோம் என்று செல்லாமல், முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு பல லட்ச ரூபாய் நிதி திரட்டி உதவி செய்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    செய்தியாளர்: கன்னியப்பன் - அம்பத்தூர்

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: School, School students

    அடுத்த செய்தி