ஹோம் /நியூஸ் /சென்னை /

ரயில் ஏறி வந்து மாதத்துக்கு ஒரு கொள்ளை.. சாலையோர மக்களுக்கு உதவி.. சென்னையில் சிக்கிய ஜென்டில்மேன் பட பாணி கொள்ளையன்!

ரயில் ஏறி வந்து மாதத்துக்கு ஒரு கொள்ளை.. சாலையோர மக்களுக்கு உதவி.. சென்னையில் சிக்கிய ஜென்டில்மேன் பட பாணி கொள்ளையன்!

கைதான கொள்ளையன்

கைதான கொள்ளையன்

திருடிய பணத்தில் ஆதரவற்றோருக்கு உணவு, உடை மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சிறைக்கு செல்வதில் எந்த கவலையும் இல்லை எனவும் அப்பு கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

    கடந்த 10 ஆண்டுகளாக மாதம் ஒருமுறை  கொள்ளை அடித்து ஆதரவற்றோருக்கு உதவிய நபரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 11 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன்  நடித்து 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். அந்தப்படத்தில் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அந்த பணத்தை ஏழைகளுக்காக செலவு செய்வார் ஹீரோ. அதே பாணியை பின்பற்றி கொள்ளையடித்த திருடனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், சீனிவாசன் நகர் சூராத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர், வரதராஜன் (55). இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சை பெற்று விட்டு 4ஆம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது உடனே இது குறித்து புது பெருங்களத்தூர் பீர்க்கங்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைபற்றி ஆய்வு செய்த போது தனி ஒருவனாக வீட்டை நோட்டமிட்டு ஆள் இல்லாததை அறிந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

    கொள்ளையனின் அங்க அடையாளங்களை கொண்டு பார்த்தபோது எக்மோர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் வசித்து வரும் அன்புராஜ் என்கின்ற அப்பு (33) என்பது தெரியவந்தது. இவர் மாதம் ஒரு முறை மட்டும் ரயில் மூலமாக வந்து கொள்ளையடித்துச் செல்லும் வழக்கம் உடையவர்.

    ராகிங் தடுப்பு.. உடனடியாக இதை செய்யுங்க - அதிரடி உத்தரவிட்ட தமிழக டிஜிபி! (news18.com)

    அதன் பிறகு குற்றப்பிரிவு போலீசார், எக்மோர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 10 நாட்களுக்கு மேலாக நோட்டமிட்டு அப்புவை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பெருங்களத்தூரில் மட்டும் கடந்த 4 மாதங்களில் மாதம் ஒரு வீடு என 4 வீடுகளில் கொள்ளையடித்ததாக தெரிவித்தார்.

    கொள்ளையடித்த நகைகளை குறித்து கேட்டபோது அந்த நகைகளை விற்று சாலையோரம் இருக்கும் மற்றும் ரயில் நிலையத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்ததாக குற்றவாளி வாக்குமூலம் அளித்தார்.

    இதனையடுத்து அவரிடம் இருந்து 11 சவரன் நகைகளை போலீசார் கைப்பற்றினர் பின்னர் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மாறுது வானிலை.. நவம்பர் 19ல் வெளுக்கப்போகுது கனமழை.. புதிய எச்சரிக்கை! (news18.com)

    இந்நிலையில், திருடிய பணத்தில் ஆதரவற்றோருக்கு உணவு, உடை மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சிறைக்கு செல்வதில் எந்த கவலையும் இல்லை எனவும் அப்பு கூறியுள்ளார்.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Chennai, Crime News, Gold Theft