Home /News /chennai /

யூ-டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

யூ-டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

சாட்டை துரைமுருகன்

சாட்டை துரைமுருகன்

யூ-டியூபர் சாட்டை துரைமுருகனை  குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டாதகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் நடத்து கொண்டதாக கூறி யூ-டியூபரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் என்ற சாட்டை துரைமுருகன் மீது நான்கு வழக்குகளை காவல்துறை பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் தேதி சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சாட்டை துரை முருகனின் மனைவி மாதரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசியல் காரணங்களுக்காக தனது கணவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும். மேலும் குண்டர் சட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கோரிய மனு மீது உரியக் காலத்திற்குள் பரிசீலிக்கவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதன் காரணமாகத் தனது கணவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரிய மனுவை அரசு உரிய காலத்தில் பரிசீலீக்காததால் துரைமுருகனுக்கு எதிரான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்கள்.

Also see... எங்க அப்பாவே ஹெல்மெட் போடமாட்டாரு.. எஸ்.பி.யிடம் புகார் அளித்த போலீஸ்காரரின் மகள்

மேலும், பேச்சுரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் வழங்கி உள்ள அடிப்படை உரிமை என்றாலும் அதற்கும் ஓர் எல்லை உள்ளதாகவும் துரைமுருகன் மீண்டும் எல்லையை மீறாமல் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai High court, Youtube

அடுத்த செய்தி