Home /News /chennai /

தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் - அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு!

தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் - அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு!

கோப்பு படம்

கோப்பு படம்

சென்னை சென்ட்ரல் நிலையம், பிராட்வே பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 25 ரூபாய் முதல் ரூ. 50 வரை வசூலிக்கப்படுகிறது. விமான நிலையங்களில் ரூ.150 வசூலிக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் குறைவாக உள்ளதாகவும் அதனை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு  3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ. 20, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்க வேண்டும் என கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

கடந்த 2017ல், இந்த உத்தரவை ரத்து செய்து நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி சென்னை ராயப்பேட்டையில் உள்ள  உட்லாண்ட்ஸ் திரையரங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், சென்னை சென்ட்ரல் நிலையம், பிராட்வே பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 25 ரூபாய் முதல் ரூ. 50 வரை வசூலிக்கப்படுகிறது.

இதையும் வாசிக்க: சுங்க கட்டண உயர்வு காரணமாக கூரியர், பார்சல் சேவை கட்டணங்கள் உயர்ந்தன

மேலும் விமான நிலையத்தில் ரூ. 150 கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், அதை கருத்தில் கொள்ளாமல்,  திரையரங்குகளில் வாகன நிறுத்தத்திற்கு குறைவான தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுப்ரமணியன், அரசு நிர்ணயித்த கட்டணம் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டி, 2017ம் ஆண்டு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வாகன நிறுத்தக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Chennai High court, Cinema, Theatre

அடுத்த செய்தி