ஹோம் /நியூஸ் /சென்னை /

சுதந்திரமடைந்து 75 ஆண்டுள் கடந்தும் சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை - சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம்

சுதந்திரமடைந்து 75 ஆண்டுள் கடந்தும் சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை - சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம்

 சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதி பாடியுள்ள நிலையில், ஒரு மனிதன், படைத்தவனை நோக்கிய பயணத்தின் போதாவது சமத்துவத்தை துவங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை கடந்த பிறகும், சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம் தெரிவித்துள்ளது.

  சேலம் மாவட்டம் நவகுறிச்சியில் வண்டி பாதையில் புதைக்கப்பட்டவரின் உடலை தோண்டி எடுக்குமாறு பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

  இதை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, மதசார்பற்ற அரசும் சாதிய ரீதியாக தனித்தனி மயானங்களை வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றனர்.

  Also see... அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

  சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதி பாடியுள்ள நிலையில், ஒரு மனிதன், படைத்தவனை நோக்கிய பயணத்தின் போதாவது சமத்துவத்தை துவங்க வேண்டும் என்றும் அந்த மாற்றத்தை அரசு தொடங்க வேண்டும் எனவும் கூறினர்.மேலும் தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Chennai High court