Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /சென்னை /

''ஆளும் கட்சியின் இசைக்கு நடனமாடும் போலீஸ்''.. காவல்துறை மீது நீதிமன்றம் கடுமையான விமர்சனம்!

''ஆளும் கட்சியின் இசைக்கு நடனமாடும் போலீஸ்''.. காவல்துறை மீது நீதிமன்றம் கடுமையான விமர்சனம்!

நீதிமன்றம்

நீதிமன்றம்

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆட்சியில் இருக்கும் கட்சியின் இசைக்கு ஏற்ப காவல்துறையினர் நடனமாடுகின்றனர் என சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு புகாரில், தன்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு, எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், அது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தனர்.

முந்தைய ஆட்சியில் எஸ்.பி. பொன்னி அளித்த அறிக்கையில், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிவித்திருந்தததையும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கங்காதர் அளித்த அறிக்கையில் எஸ்.பி.வேலுமணியை வழக்கில் சேர்த்து அறிக்கை அளித்துள்ளததையும் தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் இசைக்கு ஏற்ப நடனமாடக்கூடிய வேலையைத்தான் காவல்துறையினர் செய்கின்றனர் என்பது இந்த வழக்கில் தெளிவாகிறது என சாடிய நீதிபதிகள், எஸ்.பி.வேலுமணிக்கு நற்சான்று வழங்குவதற்காக இந்த நீதிமன்றம் இல்லை என குறிப்பிட்டனர்.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எஸ்.பி.வேலுமணி மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்தது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். காவல்துறை அதிகாரத்தை ஒரு சாராருக்கு ஆதரவாக பயன்படுத்தும்போது நீதிமன்றத்தால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என கூறிய நீதிபதிகள்,

காவல்துறையில் அரசியல் மற்றும் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவை அரசுகள் அமல்படுத்தாததால், அரசியல் கட்சியினருக்கு எதிராக தாக்கல் செய்யக்கூடிய வழக்குகளில் நீதிமன்றங்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் போல செயல்பட வேண்டிய நிலை இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

First published:

Tags: Chennai High court, SP Velumani, Tamilnadu police