ஹோம் /நியூஸ் /சென்னை /

மாற்று தேதியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாற்று தேதியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

தேசிய புலனாய்வு முகமையின் சோதனை, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை அக்டோபர் 2ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6ஆம் தேதி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 2ம் தேதி, பல்வேறு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கும்படி தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பிற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறியதாக தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி நிபந்தனைகளை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என குறிப்பிட்டார்.

மேலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததால் நடைபெறும் போராட்டங்களை காரணம் காட்டி அனுமதி மறுக்க முடியாது என குற்றம்சாட்டினார்.  மேலும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காவல்துறை கூறுவதாகவும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது தான் காவல்துறையின் கடமை என்றும் வாதிடப்பட்டது.

இதையும் வாசிக்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நிலமோசடி வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தடையை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெறும் கேரளாவிலும் புதுச்சேரியிலும் அனுமதி வழங்கபட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டனர்.

மேலும் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலான ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் எவ்வாறு அனுமதி மறுக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து காவல்துறை தரப்பில், தேசிய புலனாய்வு முகமையின் சோதனை, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில உளவு அமைப்புகள், 70 அறிக்கைகள் அளித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் காந்தி ஜெயந்தியன்று அணிவகுப்பு நடத்தக் கூடாது என  காவல்துறை கூறுவதாக ஆர்.எஸ்.எஸ் தவறாக உருவகப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காந்தி ஜெயந்தி அன்று ஊரவலம் செல்ல மட்டும்தான் அனுமதி மறுக்கிறீர்களா என கேள்வி எழுப்பிய போது, அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையும் வாசிக்க: ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிராக திருமாவளவன் தாக்கல் செய்த மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா தடைக்கு பிறகு வடக்கு மண்டலத்தில் மட்டும் பாஜகவினருக்கு சொந்தமான 402 வீடுகள், 65 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு  52,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை வாதங்களை கருத்தில் கொண்டு, மாற்று தேதியில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அறிவுறுத்திய நீதிபதி, நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதியளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, வழக்கை அக்டோபர் 31க்கு ஒத்திவைத்தார்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Chennai High court, RSS, Tamilnadu police