ஹோம் /நியூஸ் /சென்னை /

சீல் இடப்பட்ட கவரில் அறிக்கை.. 12 பேரிடம் உண்மையை கண்டறியும் சோதனை.. தீவிரமடையும் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை!

சீல் இடப்பட்ட கவரில் அறிக்கை.. 12 பேரிடம் உண்மையை கண்டறியும் சோதனை.. தீவிரமடையும் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை!

ராமஜெயம்

ராமஜெயம்

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடைப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

  தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் மாநில போலீசாரே இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிடக்கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது.

  இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், விசாரணை நிலை குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்தார்.

  குப்பை பொறுக்குவதுபோல ஆள் இல்லாத வீடுகளுக்கு ஸ்கெட்ச்.. இரவில் கொள்ளை.. தஞ்சையில் கைதான இளைஞர்... 

  இதனிடையே, சிறப்பு புலனாய்வு குழுவால் அடையாளம் காணப்பட்டுள்ள 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உண்மை கண்டறியும் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்த தென்கோவனிடம் விசாரணை நடத்த தேவையில்லை என தெரிவித்த நீதிபதி, 2 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai High court, KN Nerhu, Murder case