ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை : வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னையில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை : வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னையில் கனமழை

சென்னையில் கனமழை

சென்னையில் கடந்த ஒரு மணி நேரமாக பல்வேறு பகுதிகள் கனமழை பெய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென கொட்டித்தீர்த்த மழையால், அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை நிலவரப்படி, நாகையிலிருந்து 470 கிலோமீட்டர் கிழக்கில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது 48 மணி நேரத்தில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்தடுத்த 2 நாட்கள் வெளுத்துவாங்கும் கனமழை : எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

 இந்த நிலையில் சென்னையில் கடந்த ஒரு மணி நேரமாக பல்வேறு பகுதிகள் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஆலந்தூர், விமான நிலையம், ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், தி,நகர், ஆலந்தூர், வடபழனி,கோயம்பேடு, நூங்கம்பாக்கம்,  வள்ளூவர் கோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

சென்னை புறநகர் பகுதியில் மழை

அதேபோல சென்னையின்  புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

First published:

Tags: Chennai Rain