ஹோம் /நியூஸ் /சென்னை /

மிரட்டும் கனமழை.. சமாளிக்க தயாராகும் சென்னை... எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒரு பார்வை!

மிரட்டும் கனமழை.. சமாளிக்க தயாராகும் சென்னை... எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒரு பார்வை!

மாதிரி படம்

மாதிரி படம்

1500 பேருக்கு ஒரே நேரத்தில் உணவு சமைத்து வழங்கும் வகையில் பொது சமையற்கூடங்கள் உள்ளன. 15 மண்டலங்களிலும், தாழ்வான பகுதிகளில் 503 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  வடகிழக்கு  பருவ மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

  சென்னையில் மொத்தமுள்ள 16 சுரங்கப்பாதைகளில் சென்னை மாநகராட்சி, 6 சுரங்கப்பாதைகளையும் நெடுஞ்சாலைத்துறை 10 சுரங்கப்பாதைகளையும் பராமரித்து வருகின்றன. சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, 153 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

  மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்ற 238 பவர் ரம்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 20 ஆயிரத்து 288 மரங்கள் இரவு நேர குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டு, அதிக பாரம் உள்ள மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன.

  இதையும் படிக்க :  5 நாட்களுக்கு கனமழை.. ஆரஞ்ச் அலெட்ர்ட்.. மழை வெளுக்கும் லிஸ்டில் உங்க ஊர் இருக்கா?

  109 மீட்பு படகுகள், 101 மருத்துவ குழுக்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள், பள்ளி வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 169 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  1500 பேருக்கு ஒரே நேரத்தில் உணவு சமைத்து வழங்கும் வகையில் பொது சமையற்கூடங்கள் உள்ளன. 15 மண்டலங்களிலும், தாழ்வான பகுதிகளில் 503 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

  24 மணி நேரமும் செயல்படும் 1913 என்ற உதவி எண்ணுடன் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட அவசரகால சிறப்பு குழுவினர் மழையின் போது ஏற்படும் மின்கசிவைத் தடுக்க தெரு விளக்குகள், பில்லர் பாக்ஸ்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

  தெரு விளக்குகள் பழுது, மழை நீர் தேக்கம். குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவது உள்ளிட்ட 8 மழை தொடர்பான பிரச்னைகளை கையாள சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது.

  அதீத மழை பொழிவு, தண்ணீர் தேங்குவதை கண்காணிக்க 668 கேமராக்கள் பொருத்தப்பட்டு மாநகராட்சி சார்பில் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதைகள், கால்வாய்கள் உள்ளிட்ட இடங்களில் 38 சென்சார்கள் பொருத்தப்பட்டு, மழை நீர் தேங்குவதையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரலையில் கண்காணிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

  மாநகராட்சி செய்துள்ள ஏற்பாடுகளை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Chennai, Chennai rains, Rain Update