ஹோம் /நியூஸ் /சென்னை /

கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்.!

கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்.!

கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

Chennai strike | 35 சதவீதம் வாடகை உயர்த்தி தருவதாக ஒப்புக் கொண்ட நிறுவனம், இதுவரை வாடகை ஏற்றவில்லை என குற்றச்சாட்டு.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னை துறைமுகம் பகுதியில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை  துறைமுகம் பகுதியில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நலவாரிய குழுஅமைக்கப்பட்டு வாடகை உயர்வு தராததை கண்டித்து மாபெரும் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என 96 சதவீதம் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. சில  சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

சுமார் 3 மாத காலங்களுக்கு முன்பு சி எஃப் எஸ் நிறுவனம், கோட்டாட்சியர் முன்பு 35 சதவீதம் வாடகை உயர்த்தி தருவதாக ஒப்புக் கொண்டது. ஆனால் இதுவரை அந்த வாடகையை ஏற்றி தராத காரணத்தாலும் இப்போராட்டம் நடைபெறுவதாக போராட்ட குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க | கிராமப்புற மக்களுக்காக ரூ 51.50 லட்சம் செலவில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த போராட்ட குழுவினர், 12 சங்கங்கள் ஒன்றிணைந்து ஒப்பந்ததாரர்கள் நல குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே போராட்டம் கையெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், வாடகை உயர்வை உடனே வழங்க வேண்டும்,  இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்: அசோக்குமார், திருவொற்றியூர்.

First published:

Tags: Chennai, Local News, Workers Strike