கடந்த 50 ஆண்டுகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கை அறுவை சிகிச்சைகள் செய்து அரசு ஸ்டான்லி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சை உயர் சிறப்பு படிப்புக்காக 2 இடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக அரசு மருத்துவக் கல்லூரியில் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஏழை தொழிலாளர்கள் பலர் வசிக்கும் வட சென்னை பகுதியில் கையில் காயங்கள் ஏற்படுவதும், கை அறுபடுவதும் பொதுவான நிகழ்வாக இருந்தது. வட சென்னையில் அமைந்துள்ள ஒரே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பலரும் கை காயங்களுடன் வந்தனர்.
எனவே ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையின் துறைத் தலைவராக இருந்த மருத்துவர் வெங்கடசாமி, கை அறுவை சிகிச்சைகள் மீது கவனம் செலுத்தினார். 1971ம் ஆண்டு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறையாக தொடங்கப்பட்டு பின், கை அறுவை சிகிச்சைகள் அவசர கால சேவைகள் 24 மணி நேரமும் வழங்கும் தமிழ்நாட்டில் ஒரே மருத்துவமனையாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை உருவானது.
கைஅறுபடுவது, கை விரல்கள் அறுபடுவது என எந்த வகையாக காயமாக இருந்தாலும் நோயாளியின் கைகள் மீண்டும் செயலாக்கத்துடன் இருக்க நவீன அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. 3 மி.மீ குறைவான சுற்றளவு கொண்ட, அறுபட்ட ரத்த நாளங்களை அறுவை சிகிச்சைகள் மூலம் ஒன்றிணைத்து மீண்டும் அதன் வழியாக ரத்த ஓட்டத்தை உறுதிப்படுத்துகின்றனர் மருத்துவர்கள்.
கை கட்டை விரல் அறுபட்டால் காலிலிருந்து விரல் எடுத்து ஒட்டி அறுவை சிகிச்சை செய்வது என தொடங்கி 2018ம் ஆண்டு நாட்டிலேயே அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை வரை அரசு ஸ்டாலின் மருத்துவமனை செய்துள்ளது.
மாறிவரும் கால சூழலில் கை அறுவை சிகிச்சைகள் செய்ய அதிக மருத்துவர்கள் தேவைப்படுவதால் அதற்குரிய நிபுணத்துவத்தை ஸ்டாலின் அரசு மருத்துவமனை பெற்று இருப்பதால், கை அறுவை சிகிச்சை உயர் சிறப்பு படிப்புக்கான 2 இடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மின் தூக்கியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மின் தூக்கியின் கதவு, கை மீது விழுந்து கிட்டத்தட்ட முழு கையும் அறுபட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் வந்த ஒடிசா மாநில கூலி தொழிலாளிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதே போன்று சென்னை வேளச்சேரியில் பணிபுரிந்த வந்த கட்டிட தொழிலாளிக்கு கட்டை விரல் அறுபட்டு, தொங்கிய நிலையில் வந்தவருக்கு கடந்த வாரம் அவர் மருத்துவமனைக்கு வந்த 2 மணி நேரங்களில் அறுவை சிகிச்சை செய்து விரல் ஒட்ட வைக்கப்பட்டு தற்போது விரலில் மீண்டும் தொடு உணர்ச்சி ஏற்பட்டது.
கை அறுபட்டவர்களுக்கு அவர்களது கைகளையே பொருத்த முடியவில்லை, என்றால் மூளை சாவு அடைந்த நபரின் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படலாம். அதுபோன்று கைமாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் 65 பேர் காத்திருக்கின்றனர். இதில் 18 பேருக்கு இரண்டு கைகளும் தேவைப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Govt hospital