ஹோம் /நியூஸ் /சென்னை /

கெமிக்கல் கம்பெனியில் வாயு கசிவு.. 4 பேர் மருத்துவமனையில் அனுமதி... சென்னையில் பரபரப்பு..!

கெமிக்கல் கம்பெனியில் வாயு கசிவு.. 4 பேர் மருத்துவமனையில் அனுமதி... சென்னையில் பரபரப்பு..!

கெமிக்கல் கம்பெனி

கெமிக்கல் கம்பெனி

சொலுயூஷன் நிரப்பப்பட்ட டரம்மின் மூடியில் உடைப்பு ஏற்பட்டு திரவம் மொத்தமாக வெளியேறியதால் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai | Chennai [Madras] | Tamil Nadu

  சென்னை கொடுங்கையூரில் கெமிக்கல் கம்பெனியில் ஏற்பட்ட வாயு கசிவால் மயக்கமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  சென்னை கொடுங்கையூர் லட்சுமி அம்மன் 3-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (50). இவர் கொடுங்கையூர் சாஸ்திரி நகர் விரிவாக்கம் பகுதியில் பாலாஜி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் சொலுயூஷன் தயார் செய்யும் கம்பெனியை நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் கொடுங்கையூர் லட்சுமி அம்மன் நகர் 3வது தெருவை சேர்ந்த தேன்மொழி (58), கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமுதவல்லி(55) ஆகிய இரண்டு பேர் வேலை செய்து வருகின்றனர்.

  நேற்று இரவு 11 மணி அளவில் வேலை செய்து கொண்டிருந்தபோது சொலுயூஷன் நிரப்பப்பட்ட டரம்மின் மூடியில் உடைப்பு ஏற்பட்டு திரவம் மொத்தமாக வெளியேறியது. இதனால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த வெங்கடேசன், அமுதவல்லி, தேன்மொழி ஆகியோர் வாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தனர் அப்போது அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வெளியே நின்று இருந்த தேன்மொழியின் மகன் சுரேஷ்(38) என்பவரும் அவர்களை காப்பாற்ற சென்றபோது மயங்கி விழுந்தார்.

  இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கும், முல்லை நகர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அவர்கள் நான்கு பேரையும்  108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தேன்மொழி மற்றும் அமுதவல்லி ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  செய்தியாளர்: அசோக்குமார், சென்னை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Crime News, Gas Problem