Home /News /chennai /

கடைசி காரை தயாரித்த அனுப்பிய சென்னை போர்டு தொழிற்சாலை - முடிவுக்கு வந்த 25 ஆண்டு கால இயக்கம்

கடைசி காரை தயாரித்த அனுப்பிய சென்னை போர்டு தொழிற்சாலை - முடிவுக்கு வந்த 25 ஆண்டு கால இயக்கம்

சென்னை மட்டுமல்லாது குஜராத் மாநிலம் சன்னத்திலும் தனது நிறுவன இயக்கத்தை தற்போது போர்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது.

சென்னை மட்டுமல்லாது குஜராத் மாநிலம் சன்னத்திலும் தனது நிறுவன இயக்கத்தை தற்போது போர்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது.

சென்னை மட்டுமல்லாது குஜராத் மாநிலம் சன்னத்திலும் தனது நிறுவன இயக்கத்தை தற்போது போர்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் போர்டு. இந்த நிறுவனம் சென்னை மறைமலை நகரில் கடந்த 1995ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சென்னை அருகே செயல்பட்டு வரும் ஃபோர்டு(FORD) நிறுவனம் தனது கடைசி காரை தயாரித்து அனுப்பிவைத்தது. தொடர் இழப்பு, மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளால் வருங்காலத்தில் அதிகமான செலவு ஏற்படும் என்ற காரணத்தைக் கூறி, இந்தியாவில் இருந்து வெளியேற இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து தொழிற்சாலையை மூடப் போவதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் கடைசியாக ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் மாடலின் கடைசிக் கார் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. காருக்கு பலூன்கள், வண்ணக் காகிதங்கள், ஸ்டிக்கர்கள் ஒட்டி காரை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். தொழிற்சாலை மூடப்படுவதால், அதில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சென்னையில் இந்த நிறுவனம் 25 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் நிறுவனத்தை மூட போவதாக அறிவிப்பு வெளியானது. இதை எதிர்த்து சென்னையில் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதையும் படிங்க: ஆவின் தயிர், மோர், நெய் விலை எவ்வளவு உயர்வு? - விலை பட்டியல் விவரம்

    சென்னை மட்டுமல்லாது குஜராத் மாநிலம் சன்னத்திலும் தனது நிறுவன இயக்கத்தை தற்போது போர்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது. அந்த குஜராத் தொழில்சாலையை அப்படியே வாங்கி தன்னகப்படுத்திக் கொள்வதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அரசு மற்றும் போர்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த சூழலில் தான் சென்னை போர்டு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Automobile, Car, Chennai, Ford

    அடுத்த செய்தி