Home /News /chennai /

சென்னை வங்கி கொள்ளை: 18 கிலோ நகைகள் மீட்பு.. 3 பேர் கைது

சென்னை வங்கி கொள்ளை: 18 கிலோ நகைகள் மீட்பு.. 3 பேர் கைது

தனியார் வங்கி கொள்ளை

தனியார் வங்கி கொள்ளை

Chennai Bank Robbery: தலைமறைவாகி உள்ள சூர்யா, முருகன் ஆகியோர் குறித்து துப்புக் கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில், 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை அரும்பாக்கம், ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் என்ற தனியார் வங்கிக்குள் நேற்று புகுந்த கும்பல், ஊழியர்களைக் கத்தி முனையில் மிரட்டி வங்கியிலிருந்து 32 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வங்கியிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த வங்கியின் வாடிக்கையாளர் தொடர்புப் பிரிவின் மேலாளரான முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரிய வந்தது.

    காவலாளி உட்பட 3 ஊழியர்களுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர் தனது கூட்டாளிகளுக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் வந்த பிறகு வங்கி மேலாளர் சுரேஷ் மற்றும் பெண் ஊழியர் விஜயலட்சுமி ஆகியோரை கத்தியைக் காட்டி மிரட்டி, வங்கி லாக்கரை திறந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து முருகனுக்கு உதவியாக இருந்த அவரது உறவினர் பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.

    இதையும் படிங்க: மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் 30க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் பல லட்சம் மோசடி.. பலே ஆசாமியின் பகீர் வாக்குமூலம்..

    மேலும் இந்த வழக்கில் சக்திவேல் மற்றும் சந்தோஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை கும்பலிடம் இருந்து 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாகி உள்ள சூர்யா, முருகன் ஆகியோர் குறித்து துப்புக் கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bank, Chennai, Gold Robbery

    அடுத்த செய்தி