முகப்பு /செய்தி /சென்னை / போலி டாக்டர் பட்டம் விவகாரம்.. ஹரீஷின் வங்கி கணக்குகள் முடக்கம்.. காவல்துறை அதிரடி

போலி டாக்டர் பட்டம் விவகாரம்.. ஹரீஷின் வங்கி கணக்குகள் முடக்கம்.. காவல்துறை அதிரடி

வடிவேலுவுடன் ஹரீஷ்

வடிவேலுவுடன் ஹரீஷ்

Crime News : போலி டாக்டர் பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஹரீஷின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையை சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் நிறுவனம், நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிலையில், தங்கள் பல்கலைக்கழக பெயரை பயன்படுத்தி, சட்டவிரோதமாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் தலைவர் ஹரீஷை கைது செய்தனர். அவருடைய வங்கி கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

மேலும் ஆடுதுறையில் உள்ள வங்கி கிளையின் கணக்குகளை சென்னை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே ஹரிஷிடம் நடத்திய விசாரணையில் நான்கு பிரபலங்களுக்கு மட்டும் இலவசமாக டாக்டர் பட்டம் வழங்கிவிட்டு, மீதமுள்ள 50 பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு பட்டம் வழங்கியது தெரியவந்துள்ளது.

First published:

Tags: Chennai, Local News