ஹோம் /நியூஸ் /சென்னை /

மனைவியின் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட கணவர் கத்தியால் குத்தி கொலை... சென்னையில் பயங்கரம்

மனைவியின் கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட கணவர் கத்தியால் குத்தி கொலை... சென்னையில் பயங்கரம்

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னை : மனைவியின் கள்ளத்தொர்பை தட்டிக்கேட்ட கட்டிடத்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலையன்குறிச்சியை சேர்ந்தவர் சங்கர் (40). கிண்டி தொழில் பேட்டையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருந்தாலும் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரான பாபநாசத்தில் வசித்து வருகின்றனர்.

அதே ஊரை சேர்ந்த வீரபத்திரன் (40) என்பவருடன் சங்கரின் மனைவிக்கு திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேள்விப்பட்ட சங்கர் தனது மனைவிக்கு போன் செய்து எச்சரித்துள்ளார். இதனையடுத்து சங்கரின் மனைவி வீரபத்திரனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில் தென்காசியில் இருந்து சென்னை வந்த வீரபத்திரன் கிண்டியில் சங்கர்  பணியாற்றிய நிறுவனத்திற்கு குடிபோதையில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வீரபத்திரன், தான் எடுத்து வந்த கத்தியால் சங்கரை சராமரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஒட முயன்றார். அருகில் இருந்தவர்கள் வீரபத்திரனை மடக்கி பிடித்து கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிண்டி போலீசார், சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீரபத்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், சங்கர் கண்டித்ததால் அவருடைய மனைவி என்னுடன்  தொடர்பை கைவிட்டுவிட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சென்னை வந்து சங்கரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Extramarital affair, Murder, Police