முகப்பு /செய்தி /சென்னை / ஸ்மார்ட் டிவியை ஸ்மார்ட்டாக திருடி சென்ற இளைஞர்.. G-pay மூலம் மோசடி - சிசிடிவி காட்சி வெளியீடு!

ஸ்மார்ட் டிவியை ஸ்மார்ட்டாக திருடி சென்ற இளைஞர்.. G-pay மூலம் மோசடி - சிசிடிவி காட்சி வெளியீடு!

சிசிடிவியில் சிக்கிய மோசடி நபர் அடையாளம்

சிசிடிவியில் சிக்கிய மோசடி நபர் அடையாளம்

Chennai Theft | விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்ந்து இது போல் பல கடைகளில் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை அருகே காரில் வந்த டிப் டாப் இளைஞர் ஒருவர் G-Pay மூலம் மோசடி செய்து ரூ. 45,000 மதிப்பிலான ஸ்மார்ட் டிவியை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் பகுதயில் பொண்ணு என்டர்பிரைசஸ் எனும் மின்சாதன பொருட்கள் விற்பனை கடை பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கடையில் கடந்த 26ம் தேதி இரவு 9:14 மணியவில் காரில் வந்த டிப் டாப் நபர் கஸ்டமர் போல் கடைக்குள் புகுந்து தனக்கு 55-இன்ச் ஸ்மார்ட் டிவி வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறியதும் ஊழியரும் டிவி உள்ள பகுதிக்கு அழைத்து சென்று பலவிதமான டிவியை காண்பித்துள்ளார்.

பின்னர் ரூ.45,000 மதிப்புள்ள டிவி அவருக்கு பிடித்த போக அதைபார்சல் செய்யுங்கள் என கூறியுள்ளார். ஸ்மார்ட் டிவி வாங்கிய அந்த நபர் பணம் செலுத்தும் இடத்தில் தன்னிடம் பணமாக இல்லை ஆன்லைனில் பணம் உள்ளது. ஆகையால் கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து அதன்மூலம் ரூ.45,000 செலுத்தியதாக யாரோ ஒருவருக்கு பண பரிவர்தணையை செய்த காட்சியை காண்பித்து விட்டு அங்கிருந்து டிவியை எடுத்துக்கொண்டு காரில் சிட்டாக பறந்து தப்பி சென்றுள்ளார்.

முன்னதாக பணம் செலுத்தும் இடத்தில் அவர் பெயர் விலாசம் எழுதும் படி கூறியதை தொடர்ந்து போலியான பெயர், செல்போன் எண்ணை எழுதிவிட்டு பக்காவாக அனைவரையும் ஏமாற்றி விட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.  கொடுத்த எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது ஒரு பெண் அந்த அழைப்பை எடுத்து தவறான எண் என கூறியதாகவும், அடிக்கடி இது போன்று போன் வருவதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவிக்கவுள்ளதாக அந்த பெண் தெரிவித்ததாக கடையின் மேலாளர் கூறுகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கடைக்கு காரில் வந்த அந்த டிப் டாப் நபர், 2 நிமிடம் காரை விட்டு இறங்காமல் சுற்றி நோட்டமிட்ட பிறகே காரில் இருந்து இறங்கி கடைக்குள் வந்தது தெரியவந்தது.

விசாரணையில், அந்த நபர் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஒரு மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலும் இதே போல், ரூ. 26,000 மதிப்பிலான வாட்டர் பியுரிப்பையர் மற்றும் கேஸ் ஸ்டவ் ஆகிய பொருட்களை வாங்கி விட்டு க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்துவதாக கூறி விட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.  இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த  மோசடி நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: ப.வினோத் கண்ணன், இசிஆர்.

First published:

Tags: CCTV, Chennai, Crime News, Theft