Home /News /chennai /

ஏன் இவ்வளவு லேட்டு.. மருத்துவமனையிலேயே கர்ப்பிணி மனைவியை தாக்கிய மதுபோதை கணவர்

ஏன் இவ்வளவு லேட்டு.. மருத்துவமனையிலேயே கர்ப்பிணி மனைவியை தாக்கிய மதுபோதை கணவர்

கர்ப்பிணி மனைவியை தாக்கும் கணவர்

கர்ப்பிணி மனைவியை தாக்கும் கணவர்

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர்களை பணி செய்யவிடாமல் ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னையில் மருத்துவ பரிசோதனைக்காக வந்த 7 மாத கர்ப்பிணி மனைவியை அவரது கணவர் மதுபோதையில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை எண்ணூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் சத்திய சாவித்ரி. 7மாத கர்ப்பிணியான இவர் பரிசோதனைக்காக வடசென்னை திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  வந்துள்ளார்.

    அவருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டிருந்த நிலையில் அவரது கணவரான மனோஜ் குமார் மதுபோதையில் மருத்துவமனைக்கு வந்து நீண்ட நேரம் ஆகியும் ஏன் வீட்டிற்கு வரவில்லை என கேட்டு மருத்துவமனையிலேயே தாக்கியுள்ளார்.

    தமிழகத்தில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து

    மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்து தடுக்க முற்பட்ட போது, அவர்களை பணி செய்யவிடாமல் ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    "சிறுமி டான்யாவுடன் புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

    இதனையடுத்து மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தரவே சம்பவ இடத்திற்கு வந்த போலிசாரிடமே  பெண்ணின் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைக் கண்ட அவனது உறவினர்கள் ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவைத்தனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Published by:Musthak
    First published:

    Tags: Chennai, Crime News

    அடுத்த செய்தி