முகப்பு /செய்தி /சென்னை / மதுபோதையில் டிரைவிங்... 21 நாட்களில் ரூ.2.6 கோடி அபராதம் வசூல்.. அதிரடி காட்டிய சென்னை போலீஸ்..!

மதுபோதையில் டிரைவிங்... 21 நாட்களில் ரூ.2.6 கோடி அபராதம் வசூல்.. அதிரடி காட்டிய சென்னை போலீஸ்..!

கோப்பு படம்

கோப்பு படம்

சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து கடந்த 3 வாரங்களில் மட்டும் மிகப்பெரிய தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் அதிக அளவில் விபத்து ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுப்பதற்காக சென்னை பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை செலுத்தாதவர்கள், சென்னையில் இதற்காக அமையப்பெற்றுள்ள 10 கால் சென்டர்கள் மூலம் நேரில் வரவழைக்கப்பட்டு இணையதளம் மூலமாக பணம் பெறப்படுகிறது.

அதன்படி, கடந்த 3 வாரங்களில் மட்டும் இந்த கால் சென்டர்கள் வாயிலாக 2, 521 மது போதை வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் மூலமாக 2 கோடியே 60 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மட்டுமின்றி அசையும் சொத்துக்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

First published:

Tags: Chennai, Chennai Police, Drunk an drive