சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களிடம் இருந்து இதுவரை காவல்துறை ரூ.6 கோடி அபராதம் வசூல் செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை காவல்துறை விபத்தை குறைக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துக்களை குறைத்து வருகிறது.
சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகைரூ 10,000/ அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்தப்படுவதில்லை. ஆனால் நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை. மேலும் 7.532 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
எனவே இதுபோன்ற விதிமீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Cal centers) மூலம் தகவல் தெரிவித்து கடந்த 05.03.2023 முதல் 11.03.2023 வரை அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 545 பேர் ஆஜராகி அவர்களது நிலுவை. வழக்குகளை இணையதளம் மூலம் செலுத்தினார்கள். மேலும் அழைப்புமையங்களுக்கு வெளியில் பணம் செலுத்தியதால், அவர்கள் வேறுவிதமாக அபராதம் செலுத்தியிருந்தாலும், அழைப்பு மையங்களின் உதவியுடன் முடிந்த வழக்குகளின் விவரங்களையும் அபராதத் தொகையையும், இந்த அழைப்பு மையங்களில் இருந்து சேகரித்தனர்.
இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் 10 அழைப்பு மையங்களில் 816 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அராதத் தொகையாக ரூ.84,82,500/-செறுத்தப்பட்டன.
கடந்த 6 வாரங்களில அழைப்பு மையங்களின் இதே போன்ற நடவடிக்கைகளால் 4,922 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ, 5.09 கோடி அபராதம் தொகை செலுத்தப்பட்டன.
இதனால் 7வது வாரத்தில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 5,738 மது போதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.5,93,78,500 அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் நிலுவையில் உள்ள மதுபோதை வழக்குகளை தீர்வு காண்பதற்காக போக்குவரத்து விதி மீறல்களுக்கு எதிராக செயல்படுபவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. ஏற்கனவே இது போன்று மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 347 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்த செயல்பாட்டில் உள்ளன என்று தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cases, Chennai, Chennai Police, Drunk an drive