ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டது: மேயர் பிரியா தகவல்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டது: மேயர் பிரியா தகவல்

மழை நீர் வடிகால் அமைக்கும் பணி

மழை நீர் வடிகால் அமைக்கும் பணி

வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க 15ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்- சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அக்டோபர் 10ம் தேதிகளுக்கு பணிகளை முழுமையாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. முந்தைய ஆண்டுகளில் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், மழையால் அதிகளவில் பாதிக்கப்படும் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு  நடவடிக்கை  எடுத்து அதற்கான பணிகளை செய்து வருகிறது.

  மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை, குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் சாலைகளில் பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சென்னை மாநகர சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், சென்னையில்,  மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

  முன்னாள் மேயர் சிவராஜின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலை மற்றும் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா ராஜன், ‘ மழைநீர் வடிகால்களை பொறுத்தவரை சென்னையை இரண்டாக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பகுதியில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மற்றொரு பகுதியில் 35 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 10ம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவடைந்து விடும். வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க 15ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்’  என தெரிவித்தார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Chennai corporation, Mayor Priya