ஹோம் /நியூஸ் /சென்னை /

நில அபகரிப்பு வழக்கு.. போலி ஆவணங்களைச் சமர்பித்த திமுக கவுன்சிலர் கைது

நில அபகரிப்பு வழக்கு.. போலி ஆவணங்களைச் சமர்பித்த திமுக கவுன்சிலர் கைது

திமுக கவுன்சிலர் விமலா கைது

திமுக கவுன்சிலர் விமலா கைது

சென்னை 124ஆவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

முன் ஜாமீன் பெற்றதாக நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மெரினாவில் தொழிலதிபரைக் கடத்தி நிலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை 124ஆவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இதையும் படிங்க: தேர்தல் வருது..மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் - அலெர்ட் கொடுக்கும் ராமதாஸ்

இந்நிலையில் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைத்து விட்டதாகக் கூறி, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்தனர். முன் ஜாமீன் வழங்கிய ஆர்டரை மேஜிஸ்ட்ரேட் சரிபார்த்த போது, அதன் ஆவணங்கள் போலியானவை எனத் தெரியவந்தது.

இதனையடுத்து போலி ஆவணங்களைச் சமர்பித்ததாகக் கூறி திமுக கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

First published:

Tags: Chennai corporation, DMK