ஹோம் /நியூஸ் /சென்னை /

கொளுத்தி போடு பட்டாச! புது ரகம் இல்லையென்றாலும் பட்டாசு வாங்க குவியும் மக்கள்..!

கொளுத்தி போடு பட்டாச! புது ரகம் இல்லையென்றாலும் பட்டாசு வாங்க குவியும் மக்கள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Deepavali | ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கியவர்கள், தற்போது ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

சென்னையில் தீபாவளி பண்டிகைக்கு பெரியளவில் பட்டாசு ரகங்கள் வரத்து இல்லையென்றாலும், பட்டாசு வாங்குவோர் எண்ணிக்கை குறையவில்லை. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

தீபாவளி என்றதும் நம் அனைவரின் விருப்பமாகவும் இருப்பது பட்டாசுகள் தான். பட்டாசு என்றாலே மனதில் மத்தாப்பாய் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இனிப்பு வகைகளும், புத்தாடைகள் விற்பனையும் ஒரு பக்கம் களைகட்டினாலும், பட்டாசு விற்பனையும் படுஜோராக நடந்து வருகிறது. பெரியளவில் புதிய வரவுகள் இல்லையென்றாலும், இருக்கும் ரகங்களை மக்கள் ஆர்வமுடன் பார்த்து வாங்கிச் செல்கின்றனர்.

கடந்தாண்டை விட 30 முதல் 40 சதவீதம் வரை விலை அதிகரித்திருக்கும் நிலையில், ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கியவர்கள், தற்போது ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்கு, மூலப்பொருட்களின் உற்பத்தி குறைவும், எரிபொருட்களின் விலையேற்றமும் காரணம் என்கிறார்கள் வியாபாரிகள்.

இதையும் படிங்க | இதையெல்லாம் பண்ணாதிங்க.. தீபாவளிக்கு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?

நேரடியாக பட்டாசு கடைக்கு சென்று பிடித்த பட்டாசுகளை வாங்குவோருக்கு மத்தியில், ஆன்லைன் பட்டாசு விற்பனையும் அதிகரித்துள்ளது. ஆனால், ஆன்லைனில் தரம் குறைந்த பட்டாசுகள் விற்கப்படுவதால், விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. ஒருபக்கம் விலை அதிகம் இருந்தாலும், குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக  வாங்கிச்செல்கின்றனர் பெற்றோர்.

பாதுகாப்பாக பட்டாசு வெடித்து, தித்திக்கும் தீபாவளியில் மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Published by:Anupriyam K
First published:

Tags: Chennai, Crackers, Crackers Sale, Deepavali, Diwali