ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி.. முந்தியடித்து கல்லை தூக்கி அசத்திய இளைஞர்கள்!

சென்னையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி.. முந்தியடித்து கல்லை தூக்கி அசத்திய இளைஞர்கள்!

இளவட்டக்கல் தூக்கி அசத்திய இளைஞர்கள்

இளவட்டக்கல் தூக்கி அசத்திய இளைஞர்கள்

Chennai pongal celebration | கிராமங்களில் நடைபெறுவது போல் சென்னை அருகே மாட்டுபொங்கல் பண்டிகையையொட்டி இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னையை அடுத்த ஓஎம்ஆர் சாலையில் உள்ள படூர் ஊராட்சி சார்பில் மாட்டுப்பொங்கலை கொண்டாடும் வகையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சமுத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் இந்து முஸ்லிம் கிறிஸ்துவம் என மூன்று மதத்தை சேர்ந்த பெண்கள் மூன்று பேர் மண் பானையில் பொங்கலிட்டு மாட்டு பொங்கலை ஜாதி மதம் பேதமின்றி ஒன்றிணைந்து கொண்டாடினர்.

தொடர்ந்து 120 கிலோ, 80 கிலோ என இரு பிரிவில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதுவரை இளவட்டக்கல் தூக்கும் போட்டியை தொலைக்காட்சியில் மட்டும் பார்த்து மகிழ்ந்து வந்த படூர் ஊராட்சி மக்கள் நமக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என முந்தி வந்து ஆர்வமாக கல்லை தூக்கி வெற்றி பெற்றனர்.

பொதுவாக பொங்கல் பண்டிகையில் கிராமப்புறங்களில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறுவது வழக்கமான ஒன்று.  சென்னை அருகே உள்ள படூர் ஊராட்சியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறுவதை தகவல் அறிந்த ஏராளமான மக்கள் போட்டியை சூழ்ந்து கண்டுகளித்து தங்களது செல்போனில் அந்த காட்சியை ஆர்வமாக படம் பிடித்தனர்.

அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களுக்காக கயிறு இழுக்கும் போட்டி, உறியடிக்கும் போட்டி, லெமன் ஸ்பூன், மியூசிக்கல் சேர் என பல்வேறு போட்டிகள் நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேஸ் ஸ்டவ், மிக்ஸி, 5,000 ரூபாய் என சுமார் பல லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கினார்.

செய்தியாளர்: ப.வினோத் கண்ணன், இசிஆர் .

First published:

Tags: Chennai, Pongal 2023, Pongal festival