ஹோம் /நியூஸ் /சென்னை /

ரூ.1 லட்சம் மதிப்பிலான பைக்குகளை திருடி 10,000-க்கு விற்க திட்டம் - போலீசில் கையும் களவுமாக சிக்கிய திருடன்

ரூ.1 லட்சம் மதிப்பிலான பைக்குகளை திருடி 10,000-க்கு விற்க திட்டம் - போலீசில் கையும் களவுமாக சிக்கிய திருடன்

பைக் திருடன் கைது

பைக் திருடன் கைது

Chennai News: சென்னையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் வழிப்பறியில் ஈடுபட்டு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டுள்ளான். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் 41-வயதான மாணிக்கம் என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் மளிகை பொருட்கள் வாங்க சோழிங்கநல்லூரில் கே.கே.சாலை வழியாக ஈஞ்சம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருவர் மாணிக்கத்தை வழிமறித்து அவரை தாக்கி கத்தி முனையில் சட்டை பாக்கெட்டில் இருந்த மூன்றாயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பணத்தை பறிகொடுத்த மாணிக்கம் அருகில் உள்ள செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணனிடம் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜு, தலைமை காவலர் யாசர் ஹராபத், காவலர் நித்தியாணந்தம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து வழிபறியில் ஈடுபட்டவரை தேடி வந்தனர்.

சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே குமரன்நகர் சிக்னலில் தனிப்படை போலீரார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது விலை உயர்ந்த யமஹா ஆர்.ஒன்.5 பைக்கில் அவ்வழியே வந்த நபரை மடக்கி விசாரித்தபோது அவர் பெயர் தமிழ்ச்செல்வன் (எ) செல்வா என்பது தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகன திருட்டு வழக்கில் செம்மஞ்சேரி காவல் நிலையம் மூலம் சிறை சென்று கடந்த 14.10.2022. அன்று நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். தினந்தோறும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருவதும் கடந்த சில தினங்களாக காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர் தமிழ்ச்செல்வனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது டிபன் கடை உரிமையாளர் மாணிக்கத்திடம் கத்தி முனையில் வழிபறி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

Also Read:  வாட்ஸ்அப் காதல்: ''வாழ்ந்தா உன்கூட மட்டும்தான்'' சென்னை மாணவரை அடம்பிடித்து கரம்பிடித்த கேரள மாணவி!

தொடர்ந்து நடத்திய விசாரணையில் சோழிங்கநல்லூர் சென்னை அமைந்தகரை சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 4 பைக்குகள், அமைந்தகரை மற்றும் கானத்தூர் பகுதியில் 2 பைக்குகள் என 6 பைக்குகள் திருடியது தெரியவந்துள்ளது. மேலும் துரைப்பாக்கம், பெரும்பாக்கம், தாழம்பூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைதான தமிழ்ச்செல்வன் பைக் திருட்டு, கடை உடைத்து கொள்ளை, கத்தி முனையில் வழிபறி ஆகிய குற்றச்செயல் ஈடுபட்டு வந்ததும் இந்த திருட்டு வழக்குகள் சம்மந்தமாக காவல் நிலையங்களில் தேடப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் தமிழ்ச்செல்வனிடமிருந்து யமஹா ஆர்.ஒன்.5,  பல்சர் உள்ளிட்ட சுமார் 8 லட்சம் மதிப்புள்ள ஆறு விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழ்ச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பைக் திருட்டில் தமிழ்ச்செல்வனுக்கு உதவியாக இருந்த அசோக் என்ற இளைஞரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

திருடிய 6 பைக்குகளையும் சோழிங்கநல்லூர் பகுதியில் பதுக்கி வைத்திருந்ததும் மொத்தமாக பைக்குகளை திருடி 1,50,000 மதிப்புள்ள பைக்குகளை வெறும் ரூபாய் 8,000, 10,000-க்கும் மிகவும் குறைந்த விளைக்கு விற்பனை செய்ய திட்டம் தீட்டி இருந்த நிலையில் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

திருடிய பைக்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை முறியடித்து திருடிய 6 பைக்குகளை பறிமுதல் செய்த செம்மஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ரியாசுதீன், குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர் ராஜு, தலைமை காவலர் யாசர் ஹராபத், காவலர் நித்தியாணந்தம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர்: ப.வினோத்கண்ணன்

First published:

Tags: Bike, Chennai, Crime News, Local News, Tamil News, Yamaha bike