அடுத்த பருவமழைக்கு தயாராகும் வகையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை அடுத்த 15 நாட்களில் தொடங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பருவமழைக்கு முன்பாக மழைநீர் வடிகால் பணிகள் முன்னுரிமை ஒன்று மற்றும் முன்னுரிமை இரண்டு என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் சில பணிகள் பல்வேறு காரணத்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத முடியாத நிலை ஏற்பட்டது. இந்தப் பணிகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எதிர்வரும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு தயாராவது குறித்து, தலைமை செயலர் இறையன்பு தலைமையில், திருப்புகழ் கமிட்டி மற்றும் மாநகராட்சி, நீர்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கடந்தாண்டு மழைநீர் தேங்கிய விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை பகுதிகள் மற்றும் கொளத்துார், பட்டளம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து, திருப்புகழ் கமிட்டி, அரசுக்கு சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பருவமழைக்கு முன்னதாகவே துார்வாரும் பணிகளை துவங்க வேண்டும். மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள, பிரதான நீர்நிலைகளான கூவம், அடையாறு, பகிங்ஹாம் ஆகியவற்றுடன், 54 கிளை கால்வாய்களையும் துார்வாரி பராமரிக்க வேண்டும். அதற்கான நிதி பெற்று பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு திருப்புகழ் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது
இதன்படி சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை 15 நாட்களுக்குள் தொடங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, நிதி தேவை உள்ளிட்டவைகள் குறித்த குறித்த விரிவான திட்டம் தயாரிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவை, ஓரிரு நாட்களில் முடிந்து, ஒப்பந்தம் வழங்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai corporation